Font Size:
Contrast:

எங்களைப் பற்றி

விவசாயிகளின் நலன், நாட்டின் முன்னேற்றம் - இதுவே எமது தாரக மந்திரம்.

இயக்கத்தின் தத்துவம்

விவசாயிகள் இந்த நாட்டின் முதுகெலும்பாக இருந்தும் இவர்கள் பின்னுக்கு தள்ளப்பட்டார்கள். எனவே விவசாயிகள் இந்த நாட்டின் கண்கள் என்று எண்ணி அவர்களை முன்னுக்கு கொண்டு வருவதற்கு உதயமானதுதான் இந்த "நாம்" என்கிற நமது இயக்கம்.

"உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - வீணில் உண்டு களித்திருப்போரை நிந்தனை செய்வோம்"

பொருளாதார மேம்பாடு

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்துதல்.

சமூக ஒற்றுமை

அனைத்து விவசாயிகளையும் ஒருங்கிணைத்தல்.

புதிய எழுச்சி

சமூக சேவைக்கு வருகின்ற பல படித்த இளைஞர்கள் சிந்திக்க ஆரம்பித்து விட்டார்கள். விவசாயிகள் அனைவரையும் ஒன்றிணைத்து ஒரு மாபெரும் இயக்கத்தை உருவாக்குவதன் மூலம் விவசாயிகளின் ஒட்டு மொத்த பிரச்சனைகளை தீர்த்திட ஒரு வலுவான அமைப்பாக "நாம்" இயக்கம் உருவாகும்.

இது ஜாதி மத சார்பாக இயங்கக் கூடிய இயக்கம் அல்ல. விவசாயிகளின் நலன், பொருளாதார வளர்ச்சி, சுய மரியாதை ஆகியவற்றுக்கு முன்னுரிமை கொடுப்பவர்களை "நாம்" வரவேற்கிறது.

  • இளைஞர் பங்கேற்பு
  • சமூக பொறுப்பு
  • விவசாயி ஒற்றுமை
  • சமுதாய மாற்றம்

சுற்றுச்சூழல் அர்ப்பணிப்பு

சுற்றுப்புறச் சூழல் மாசுபடாத மரங்கள் அடர்ந்த நாடாக, மழை வளம் குன்றாத பாரதத்தை உருவாக்க சபதம் ஏற்போம். வருங்கால நம் சந்ததிகளைக் காப்போம்!

பயன்படுத்தாத கிணறுகளில் மழைநீரை சேமித்து நிலத்தடி நீரை உயர்த்துவோம்.

மரக்கன்று நடுதல்
மழைநீர் சேமிப்பு
நிலத்தடி நீர் மேம்பாடு
நிலையான பார்வை

"உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்மற் றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்."

- திருவள்ளுவர் (Thiruvalluvar)

"உழவன் செழித்தால் தான் நாடு செழிக்கும். உழவன் நலம் தான் நாட்டின் உயர்வு."

கடைசியாக புதுப்பிக்கப்பட்டது:15-03-2026